ஒரு் link-ஐ சொடுக்கும்போது, அதன் வெளிப்பாடு ஒரு் புதிய பக்கத்தில் இடம்பெறாமல், அதே பக்கத்தில் இடம்பெறுமாறு செய்ய frames உதவுகிறது. இதன் மூலம் திரையைக் குறைந்தபட்சம் இரண்டு பகுதிகளாகப் பிரித்து, முதல் பகுதியில் links-ம் அடுத்த பகுதியில் அதற்கான வெளிப்பாடும் வருமாறு செய்யலாம்.

<frameset> tag

இது திரையை பல பிரிவுகளாகப் பிரிக்க உதவுகிறது. இதன் cols-எனும் attribute திரையை இடமிருந்து வலமாகவும், rows-எனும் attribute திரையை மேலிருந்து கீழாகவும் பிரிக்க உதவுகிறது. இத்தகைய பண்புகளின் மதிப்புகளை சதவீதத்தில் கொடுப்பது புரிந்து கொள்ள சற்று சுலபமாக இருக்கும். இது <body> tag-க்கு பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதற்குள் <body> tag-க்குள் பயன்படுத்திய tags-க்கு இடமில்லை.

<noframes> tag

frames-ஐப் புரிந்து கொள்ள முடியாத browser-கள் <noframes> tag-க்குள் உள்ளவற்றை execute செய்து அதன் வெளிப்பட்டை browser-ல் காட்டும். இதற்குள் body tag-க்குள் பயன்படுத்திய commands-ஐ பயன்படுத்தலாம்.

<frames> tag

திரையானது எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதோ அத்தனை <frames> tag, frameset-க்குள் காணப்படும். இதன் src எனும் பண்பு, ஒரு் frame-க்குள் என்ன இடம்பெற வேண்டும் என்பதைக் குறிப்பிடப் பயன்படுகிறது. அடுத்ததாக name எனும் பண்பு ஒவ்வொரு frame-க்கும் பெயரிட உதவுகிறது.

இத்தகைய tags-ஐக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு் program-ஐ பின்வரும் உதாரணத்தில் காணலாம்.

File: frame1.htm

<html>

<head><title></title></head>

<frameset cols=”30%,*”>

<frame src=”frame2.htm” name=”left”/>

<frame src=”table1.html” name=”right”/>

</frameset>

<noframes>

Your browser doesn’t support frames.

</body>

</html>

இதில் frameset-ன் cols எனும் பண்பினால் திரையானது இடமிருந்து வலமாக இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. cols-ல் கொடுக்கப்பட்ட மதிப்புகள் மூலம் முதல் பகுதியானது திரையில் 30% இடத்தையும், அடுத்த பகுதியானது மீதமுள்ள இடத்தையும் (* என்பது மீதமுள்ள 70% இடம்) எடுத்துக்கொள்கிறது.

திரையானது இருபகுதிகளாகப் பிரிக்கப்படவே, இதற்குள் இரு frames tag உள்ளது. முதல் frame-க்கு “left” என்றும் இரண்டாவது frame-க்கு “right” என்றும் பெயரிட்டுள்ளோம். முதல் frame-ல் src-ன் மதிப்பு frame2.htm என்றிருப்பதால், இந்த program-ன் வெளிப்பாடு முதல் frame-க்குள் இடம்பெறும்.

frame2.htm எனும் program பின்வருமாறு.

File: frame2.htm

<html>

<head><title></title></head>

<body>

<a href=”table1.html” target=”right”>simple Table</a><br>

<a href=”table2.html” target=”right”>Table with border</a><br>

<a href=”table3.html” target=”right”>Table with colour</a>

</body>

</html>

இந்த program-ல் உள்ள 3 links-ம் left என்று பெயரிடப்பட்ட முதல் frame-க்குள் வெளிப்படும்.

இதில் target என்று ஒரு் புது பண்பு anchor tag-ல் இடம்பெற்றுள்ளதையும் அதன் மதிப்பு “right” என்று இருப்பதையும் கவனிக்கவும். இந்தப் பண்பே அந்த link-ஐ சொடுக்கும்போது, அதன் வெளிப்பாடு புது பக்கத்தில் இடம்பெறாமல், “right” எனும் பெயரைக் கொண்ட இரண்டாவது frame-ல் இடம்பெற உதவும்.

இதன் வெளிப்பாடு பின்வருமாறு.

License

Icon for the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License

எளிய தமிழில் HTML Copyright © 2015 by து. நித்யா is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book